இது உங்களுக்குப் பாடமாயிருக்கட்டும்

1 April 2014

 

ஒருமுறை, பாட்னாவில் நடைபெறவிருந்த IMPACT ஊழியர் கருத்தரங்கு கூட்டத்திற்கு பகல் 12:30 –க்கு வளாகத்திலிருந்து புறப்படவேண்டும் என்று சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொல்லியிருந்தார். உடன் ஊழியர்களாகிய நாங்கள் ஜெம்ஸ் வளாகத்தினுள் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தோம். 12.15-க்கு ஓட்டுநர் டெம்போ டிராவலர் வாகனத்தைக் கொண்டு வந்தார். நாங்கள் எங்கள் பொருட்களை வாகனத்தில் வைத்தவாறு, சகோதரரின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களுக்குள் வந்து சேர்ந்தார் சகோதரர். ஓர் சிறிய ஜெபத்துடன் அனைவரும் வாகனத்தில் ஏறி அமர்ந்தோம்ளூ வாகனம் புறப்பட்டது. ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசலிலிருந்து வாகனம் சுமார் பத்து அடி வெளியே சென்றதும், 'அண்ணன், அலுவலகத்தில் டீசல் போடுவதற்கான சீட்டு வாங்க மறந்துவிட்டேன், உடனே வாங்கிக்கொண்டு வந்துவிடுகின்றேன்' என்று ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார். அதனைக் கேட்ட சகோதரர், '12.30 –க்கு புறப்படவேண்டுமென்றால், அனைத்தும் அதற்கு முன்னரே ஆயத்தமாயிருக்கவேண்டும், டீசல் போடுவதற்கு நான் பணம் தருகிறேன்' என்று சொன்னார். சிக்hரியாவிலிருந்து ஏழு கி.மீ தொலைவிலுள்ள டெஹ்ரி ஆன் சோன் சென்றடைந்ததும், அங்கிருந்த பெட்ரோல் பல்க் ஒன்றில் வாகனத்திற்கு டீசல் நிரப்பினோம், டீசலுக்கான ரூபாய் 1500 ஐ சகோதரரே கொடுத்தார். தொடர்ந்து, வழியில் சென்றுகொண்டிருக்கும்போது, 'டீ குடிக்கலாமா' என்று கேட்டார், நாங்களும் சரி என்று சொன்னோம். சாலையோரமிருந்த டீ கடை ஒன்றில் வாகனத்தை நிறுத்தினோம், அனைவரும் டீ குடித்துத்கொண்டிருந்தோம், சகோதரரோ 'எனக்கு டீ வேண்டாம்' என்று சொல்லிவிட்டார். அண்ணன் நீங்கள் ஏன் டீ குடிப்பதில்லை என்று கேட்டதற்கு, சில விளங்கங்களையும் கொடுத்தார். நாங்கள் டீ குடித்து முடித்ததும் அதற்கான பணத்தை அவரே கொடுத்தார். அண்ணன், அலுவலகத்தில் வாங்கிய பணம் இருக்கிறது என்று நான் கொடுக்க முயற்சித்தபோதிலும், 'டீ குடிக்க நான்தானே உங்களை அழைத்தேன்' என்ற பதிலோடு பணத்தை எடுத்து நீட்டினார். பாட்னா கூட்டங்களை முடித்து ஜெம்ஸ் வளாகம் வந்து சேர்ந்தோம். செலவீனங்களை கணக்குப் பார்த்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க நான் ஆயத்தம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, சகோதரர் டீசலுக்கு ரூபாய் 1500 கொடுத்ததை நினைவில் கொண்டு, அவரது அலுவலகத்திற்குச் சென்று அந்த 1500 ரூபாயை அவரிடம் கொடுத்துவிட முயன்றேன், ஆனால், சகோதரரோ வாங்க மறுத்துவிட்டார். 'இது உங்களுக்குப் பாடமாயிருக்கட்டும்' என்று அன்போடு ஓர் பாடத்தைக் கற்றுக்கொடுத்து அனுப்பினார்.