சாத்தானின் பேராசையே நம்மையும் பேரழிவுக்குள் தள்ளுகிறது. 'அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்ளூ வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்ளூ உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே' (ஏசா 14:14) என்றல்லவோ சாத்தான் அடையாளம் காட்டப்படுகிறான். 'வானத்துக்கு ஏறவேண்டும்' 'சிங்காசனத்தை உயர்த்தவேண்டும்' 'பர்வதத்திலே வீற்றிருக்கவேண்டும்' 'உன்னதங்களில் ஏறவேண்டும்' 'உன்னதமானவருக்கு ஒப்பாகவேண்டும்' என்பதுதான் சாத்தானின் பிரதானமான திட்டம். தேவனுக்குப் பதிலாகத் தன்னைக் காட்டவேண்டும் என்பதும், தேவனாக தன்னையே ஜனங்கள் ஆராதிக்கவேண்டும் என்பதுமே அவனது விருப்பம். 'என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்' (மத் 4:9) என்ற சோதனையை அவன் இயேசுவோடு முடித்துவிடவில்லை, கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒவ்வொருவரிடத்திலும் தொடருகின்றான்.

நம்மைச் சுற்றிலும் சத்துரு விதைத்துவைத்திருக்கும் களைகளைக் களைந்தெறியும் போருக்கு நமது கரங்கள் ஆயத்தமாகட்டும். போலியான அவனது பிம்பத்தை, மெய்யாள ஒளிக்கு நாம் ஒப்பிட்டுவிடக்கூடாது. போலியானது என்று தெரிந்தும் அத்துடன் தொடர்ந்து போய்க்கொண்டேயிருப்பது நம்மைப் பேய்களிடமே கொண்டு சேர்க்கும். போலிகள் ஒருபோதும் நமக்கு வேலிகளாகிவிடாது, கேலிகளுக்குத்தான் காரணமாகும். தலைமுறை தலைமுறையாக கிறிஸ்தவர்களோடு ஒன்றாக்கிவிட்ட ஒன்றை வென்று வெளியேற்றாவிடில் நாம் தடம் புரண்டுக் கிடப்போம். எழுதப்பட்டதை விட்டு விட்டு, அவ்வப்போது சத்துரு எடுத்துக் கொடுத்துக்கொண்டிருப்பதை சேர்த்துக்கொண்டேயிருந்தால் அவனுடைய பொக்கிஷதாரர்களாகவே நாம் மாறிப்போய்விடுவோம். தவறிச் செல்லும் பாதையையே தடமாக வருங்காலச் சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்வோமென்றால், வெற்றிக் களிப்பு தொடர்ந்து சத்துருவின் முகத்திலேயே தெரியும் என்பது வருத்தமான செய்தி.

அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து தேவன் தனது ஜனத்தை புறப்படப்பண்ணியபோது, 'என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம் (யாத். 20:3,4) என்றார். எனினும், தேவன் விதித்த கட்டளையிலிருந்து நாம் விலகிச் செல்லும்படியாக, 'என்னையன்றி' என்ற வார்த்தைக்குள்ளேயே சாத்தான் தன்னை வைத்து வணங்கச் செய்துவிட்டதனை நாம் அறிந்தேயாகவேண்டும். உருவ வழிபாடு என்பது ஆண்டவர் ஒழித்துவிட்ட ஒன்றுளூ என்றாலும், 'இயேசு' என்ற பெயரிலேயே சத்துரு சாதுரியமாக ஊடுருவிவிட்டது வேதனையானதே. முந்தையத் தலைமுறையினர் இந்தத் தந்திரத்தை அறிந்திருந்தபோதிலும், ஆண்டாண்டு காலம் சென்றபோதோ அவன் தன்னை ஆண்டவராகவே அறிமுகப்படுத்திவிட்டான். 'உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்குகிறீர்கள்' (மத். 15:6) என்றாரே இயேசு. நம்முடைய வாழ்க்கையில் நேரடியாக சத்துரு ஜெயமெடுக்காவிட்டாலும், வரலாறு வழியாகவோ பலருடைய வீட்டிலே இன்னும் அவன் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறான்.

இயேசு என்று சொல்வதற்காக ஏதாகிலும் ஒன்று வேண்டும் என்றால், கண்டதையும் வணங்கும் ஜனங்களுக்கும், கர்த்தரை அறிந்தோர் என்று சொல்பவர்களுக்கும் வேறுபாடு இல்லையே. இந்த நிலையில் இருந்த ஜனங்களை, ஒரு படத்தைக் காட்டி தன் பக்கம் சாத்தான் சவதரித்துக்கொண்டது அவலமானதே. உலகத்தில் யாரைக் கேட்டாலும் 'இயேசு' என்று சொல்லும்படியாக தனது ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஒரு மனிதனை ஆண்டவராக்கி கிறிஸ்தவர்களையே அவன் நம்பச் செய்துவிட்டது வேதனை. ஓரினச் சேர்க்கையாளனும், விபச்சாரக்காரனும், உடன் பிறந்த சகோதரியுடன் உறவு வைத்திருந்தவனும், உடன் பிறந்த சகோதரனைக் கொலை செய்தவனுமாகிய சீசரி ஃபோர்ஜியாவின் படமே இன்று கிறிஸ்தவர்களிடத்தில் 'இயேசு' என்ற பெயரில் வலம்வந்துகொண்டிருக்கின்றது. இதுவரை கிறிஸ்தவர்கள் அறியாமலிருப்பதை, அறிவியாமலேயே இருந்துவிடுவோம் என்று நாம் நினைத்தால் அறிவில்லாமல் ஆராதிப்போரை ஒருநாள் அவன் (சத்துரு) அழித்துப்போடுவது உறுதி. உதாரணமாக, நாளை முதல் பள்ளிகள் எங்கும் பூனையை நாய் என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று உலக நாடுகள் ஆணை பிறப்பிக்குமென்றால், பள்ளிக் குழந்தைகள் அனைவரும் பூனையைப் பார்க்கும்போது நாய் என்று சொல்லத் தொடங்கிவிடுவார்கள். அது நாய்; அல்ல பூனை என்று முன்னோர்கள் சொன்னாலும், நம்பமாட்டார்கள், அவர்களையும் நம்பவிடமாட்டார்கள். இதன் அடுத்த கட்டம் என்ன? ஓன்று அல்லது இரண்டு தலைமுறைகள் இந்தப் போராட்டம் தொடர்ந்தாலும், குழந்தைகள் தாத்தாவாகிவிடும்போது அது வழக்கத்தில் தாராளமாகிவிடும். மேற்கண்ட உதாரணத்தைப் போலவே, கிறிஸ்தவர்களுடைய ஆலயங்களிலும், வீடுகளிலும் இயேசுவின் உருவப்படம் என்ற போர்வையில் சீசரி ஃபோர்ஜியாவின் படம் அரங்கேறிவிட்டது.

ஐரோப்பியர்கள் மூலமாகவே அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி ஆரம்பமாகிறது என்பதற்கான தடயங்கள் உலகில் ஆங்காங்கே தென்படத்தொடங்கிவிட்ட நிலையில், கடைசி காலமாகிய இந்நாட்களில் 'எப்படி வந்தது இயேசு படம்?' என்பது நாம் கட்டாயமாக தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. 'போர்ஜியா' என்பது ஸ்பெயின் தேசத்தின் வலன்சியா (Valencia) பட்டணத்தைச் சேர்ந்த பாரம்பரியமிக்கதோர் குடும்பம். இக்குடும்பத்தின் வழியில் வந்த அல்ஃபோன்சோ தி ஃபோர்ஜியா (Alfonso di Borgia) (1378-1458) 1444 -ம் ஆண்டு கார்டினலாக பதவியேற்றபோது, அவரது குடும்பத்தினரும் இத்தாலிக்கு இடம்பெயர்ந்தனர். பதினோரு ஆண்டுகளுக்குப் பின்னர் அல்ஃபோன்சோ தி ஃபோர்ஜியா போப் ஆக பதவியேற்று Callixtus III என்ற பெயருடன் பதவியில் தொடர்ந்தார். இவர், தனது சகோதரி இசபெல்லா ஃபோர்ஜியாவின் மகனான ரோட்ரிகோ லேன்சொலி ஃபோர்ஜியா (Rodrigo de Lanzoly de Borgia) என்பவரை 1492-ம் ஆண்டு Valencia பட்டணத்தில் ஆர்ச் பிஷப் ஆக மாற்றினார்ளூ ஒரு வருடத்தில் ரோட்ரிகோ லேன்சொலி ஃபோர்ஜியா கார்டினலாகவும் மாறினார்.

Alfonso di Borgia (Callixtus III) வின் மரணத்திற்குப் பின்னர், Pius II, Paul II, Sixtus IV, Innocent VIII ஆகிய போப்களைத் தொடர்ந்து 1492-ம் ஆண்டு போப் பதவிக்கு உயர்ந்த சுழனசபைழ டீழசபயை, போப் அலெக்சாண்டர் VI என்று அழைக்கப்பட்டார். திருமணமாகாமல் Vannozza (Giovanna) dei Cattanei என்ற பெண்ணுடன் வாழ்ந்துகொண்டிருந்த இவருக்கு 1476-ம் ஆண்டு இத்தாலியில் உள்ள ரோம் நகரத்தில் சீசரி ஃபோர்ஜியா (Cesare Borgia) என்ற மகன் பிறந்தான். 15 வயதில் பம்ப்லோனா (Pamplona) பட்டணத்தில் பிஷப் ஆக பொறுப்பேற்ற சீசரி ஃபோர்ஜியா, தனது 18 வது வயதில் கார்டினலாக உயர்வு பெற்றான். இராணுவ தளபதியாக இருந்த சீசரியின் சகோதரர் ஜியொவென்னியையே (Giovanni) சபைகளுக்கும் முன் நிறுத்த போப் முயற்சித்துக்கொண்டிருக்கும்போது, 1497-ம் ஆண்டு மர்மமான முறையில் ஜியொவென்னி கொலை செய்யப்பட்டான். ஜியொவென்னியின் மீது பகையுணர்வுடன் இருந்துவந்த சீசரி ஃபோர்ஜியாவே இக்கொலைக்குக் காரணம் என்கின்றது வரலாறு. தனது சகோதரனான ஜியொவென்னியின் மரணத்தைத் தொடர்ந்து, தனது கார்டினல் பதவியை இராஜினாமா செய்த சீசரி ஃபோர்ஜியா, இராணுவ தளபதியாகவும் பொறுப்பேற்றான்.

1502-1503 -க்கு இடைப்பட்ட காலத்தில் லியானார்டோ டாவின்சி (Leonardo da vinci) என்பவரை இராணுவத்தில் ஓவியராகவும், கட்டட வடிவமைக்கும் பொறியாளராகவும் பணியில் அமர்த்தினான் சீசரி ஃபோர்ஜியா. லியானார்டோ டாவின்சி (Leonardo da vinci) மற்றும் சீசரி ஃபோர்ஜியா இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நேசித்துவந்தனர். சீசரி ஃபோர்ஜியாவின் மீதுள்ள அன்பினை வெளிக்காட்ட, அவனைக் குறித்த பல ஓவியங்களை தொடர்ந்து வரைந்துகொண்டிருந்தார் லியானார்டோ டாவின்சி. மைக்லே; ஏஞ்சலோ (Michelangelo) என்ற மற்றும் ஓர் ஓவியரும் சீசரி ஃபோர்ஜியாவை பல்வேறு கோணங்களில் ஓவியமாகத் தீட்டிக்கொண்டிருந்தார். ஒருவரையொருவர் போட்டி போட்டுக்கொண்டு சீசரி ஃபோர்ஜியாவை படம் வரைந்தபோதிலும், லியானார்டோ டாவின்சி வரைந்த படங்களை போப் அலெக்சாண்டர் VI சிறந்ததாகக் கருதினார்.

போப் அலெக்சாண்டர் VI -ன் இளைய மகனும், சீசரி ஃபோர்ஜியாவின் தம்பியுமான ஜியாபிரி ஃபோர்ஜியாவின் (Gioffree Borgia)மனைவி, தனது கணவனின் சகோதரர்களான சீசரி ஃபோர்ஜியா மற்றும் ஜியோவென்னி ஆகியோருடனும் உறவு வைத்திருந்தவள். தனது உடன் பிறந்த சகோதரி லுக்ரீஷியா ஃபோர்ஜியா (Lucrezia Borgia) உடனும்; சீசரி ஃபோர்ஜியா உறவு வைத்திருந்தான் என்பதும் மறைக்க முடியாத சரித்திரம். சீசரி ஃபோர்ஜியாவின் சகோதரி Lucrezia Borgia கர்ப்பமானபோது, கருவிற்குக் காரணம் சகோதரர்களா அல்லது தந்தையா எனச் சந்தேகிக்கும் அளவிற்கு அவர்கள் குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்ததாயிருந்தது.

இஸ்லாமியர்களுடன் யுத்தம் நடந்துகொண்டிருந்த அந்நாட்களில், தனது மூத்த மகனான சீசரி ஃபோர்ஜியாவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த போப் அலெக்சாண்டர் VI, இயேசுவின் படங்களுக்குப் பதிலாக சீசரி ஃபோர்ஜியாவின் படங்களை வரையும்படியாக ஓவியர்களுக்கு ஆணையிட்டார். உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் அதனை அங்கீகரிக்கும்படியாகவும் கட்டளையிட்டார், போராட்டங்கள் வெடித்தது, போருக்கான காரணத்தை அறிந்தவர்கள் மறைந்ததும், போரும் அமைதியானது. உண்மையான இயேசு ஓர் ஆப்ரிக்க - ஆசிய (Afro - Asiatic) மனித நிறமும் உருவமும் கொண்டவர்ளூ யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளைக்காரர்களோ, வெள்ளை நிறமுடையவர்களோ அல்லளூ என்றபோதிலும், அவரது உருவங்கள் அனைத்தும் ஐரோப்பியரின் வண்ணமாக இருந்த சீசரி ஃபோர்ஜியாவாகவே தீட்டப்பட்டன. உலகமெங்கிலும் கருப்பினத்தவருக்கு எதிரான நிறவெறியினை சத்துரு அவிழ்த்துவிட்டு, அவர்களை அழிக்க முயற்சிப்பதற்கு இயேசுவின் நிறமும் ஓர் காரணம் என்பது மறுக்க இயலாத ஓர் மறைமுகமான காரணம் என்பதை நாம் அறிந்தே ஆகவேண்டும். இயேசு ஓர் ஓரினச் சேர்க்கையாளர் (Homosexual) என்ற கருத்துக்களை சத்துருக்கள் பரப்புவதற்குக் காரணம், இன்றும் நாம் வைத்துக்கொண்டிருக்கிற ஓரினச் சேர்க்கையாளனாகிய சீசரி ஃபோர்ஜியாவின் படமே. ஓரினச் சேர்க்கை ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவர்களிடயே பிரபலமாகிவருவதும், சீசரி ஃபோர்ஜியாவைப் பிடித்திருந்த ஆவியின் தொடர்ச்சியே. பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள் (சக 2:7). 'நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்' (அப் 17:23) என்று அத்தேனே பட்டணத்தாரை நோக்கி பவுல் சொன்னதைப் போலவே சொல்லபடவேண்டிய காலம் இது.

எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்ளூ ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான் (2தெச. 2:4) என்கிறாரே பவுல் பவுல்.

இதோ, மேகங்களுடனே வருகிறார்ளூ கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்ளூ பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென் (வெளி 1:7). குத்தினவர்களுக்கு யாரைக் குத்தினோம் என்று அடையாளம் தெரியும்ளூ ஆனால், வேறொரு உருவத்தை இயேசு என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கோ அது அதிர்ச்சியாகத் தெரியும்ளூ 'ஐயோ, எங்கள் சிந்தையில் இருப்பது வேறொரு உருவமல்லவா?' 'இதுவா இயேசு' என்று அவர்களை புலம்பச் செய்துவிடும். பூமியின் கோத்திரத்தாரெல்லாரையும் புலம்பச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனேயே சாத்தான் செயல்படுகின்றான்.

இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்ளூ இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும் (மத் 24:25-27) என்று தனது இரண்டாம் வருகையைக் குறித்து இயேசுவே நமக்குச் சொல்லியிருக்கிறார். பூமியிலே அறைவீட்டிற்குள்ளும், அரங்கத்திற்குள்ளும் இருந்துகொண்டு தன்னை கிறிஸ்து என்று காட்ட நினைக்கிறான் சாத்தான்.

பொய்க்குப் பின்னால் ஓடி, மெய்யானதை மறந்துவிடும்படியாகவும், இயேசு மீண்டும் வரும்போது, அவரல்ல என்று நாம் சொல்லி அனைவரும் மறுதலிக்கும்படியாகவும் சத்துரு செய்யும் திட்டங்களுக்கு விலகி ஓடுவோம். உருவம் என்ற ஒன்றை மக்கள் விரும்பியதால், சத்துரு ஊடுருவுவதற்கும் மக்களை வீழ்த்துவதற்கும் வழியுண்டாயிற்று. இது போலியான உருவம் என்றால், இயேசுவின் உண்மையான உருவப்படம் எது என்று நாம் மீண்டும் உருவத்தைக் குறித்தே கேள்வி கேட்டுக்கொண்டிருப்போமென்றால், தோமாவிற்குச் சொல்லப்பட்ட பதிலே நமக்கும் சொல்லப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 'நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்' (யோவான் 20:29) என்று தோமாவினிடத்தில் இயேசு சொன்னாரே. எனவே, வார்த்தையாக வேதத்தில் தேவன் வெளிப்படுத்தியிருக்கிற இயேசுவை காணாமல் விசுவாசித்து, தேவனுடைய பிள்ளைகளாகும் பாக்கியம் பெறுவோம்.

தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல் வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொளிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான் (அப் 19:24). கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று போதித்து, அநேகரை வசப்படுத்தியிருந்தான் பவுல் (அப். 19:26). இதனைக் கண்ட கோவில்களை விற்கும் வியாபாரிகளுக்குப் பயம் உண்டாயிற்று. 'நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் எண்ணமற்றுப் போகிறதற்கும், ஆசியா முழுமையும் பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது' (அப். 19:27) என்று சொல்லி, கோபத்தினால் நிறைந்தார்கள். இதைப் போலவே இன்று இயேசு என்ற பெயரில் சீசரி ஃபோர்ஜியாவின் படம் விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்த நாம் முயற்சிக்கும்போது, அவர்கள் அப்படிப்பட்ட தொழிலைச் செய்கிற வேலையாட்களை கூட்டி கூச்சலிடக்கூடும். என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார் இயேசு (யோவா 2:16)ளூ ஆனால், அவருடைய குமாரன் என்ற பெயரில் நடக்கும் கள்ளத்தனமான வியாபாரத்தை தேவன் பொறுத்துக்கொள்வாரோ. ஆதாயம் அற்றுப்போகும் என்பதற்காக, அநேகருடைய ஆத்துமாக்களைக் கெட்டுப்போகச் செய்யலாமோ? பறவைக் காய்ச்சல் என்ற பெயரில் விலைமதிப்புள்ள இலட்சக்கணக்கான கோழிகளை நாம் புதைக்கத் தயங்கவில்லையே, உயிரைக் காக்க இத்தனை வீரமாய் செயல்பட்டு, இழப்பினை தாங்கிக்கொள்ளுவோமென்றால், உள்ளத்தைக் காக்க அதனிலும் மேலான செயல்படவேண்டியது அவசயமல்லவா. நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? (கலா 4:16) என்று பவுல் சொல்வதைப் போல, சத்தியத்தை அறிவிக்கிறவர்களை சத்துருவாக்கிவிட்டு, சத்துருவோடு தொடர்ந்து தோழமை கொண்டிருக்க இடம் கொடுக்கவேண்டாம்ளூ நித்தியத்தை அடையவேண்டுமென்றால், நாம் நிச்சயம் சத்தியத்தைத் தொடர்ந்தேயாகவேண்டும்.