ENCOUNTER

கிறிஸ்துவில் அன்பானோரே,

என்னை அழைத்த கர்த்தரின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். இவ்விணையதளத்தின் மூலம் தங்களைச் சந்திப்பதில் உவகை கொள்கிறேன். இறைவனோடும், மனிதர் பலரோடும் கொண்ட உறவிலும், கொள்ளும் உரையாடல்களிலும் பிறக்கும் கருத்துக்கள் என்னை மட்டுமல்ல, பலரையும் வடிவமைக்கச் சிறந்தவைகள். அருமையானவைகள் என்னிடம் மட்டுமே அடங்கிக்கிடக்கவோ, அகத்தில் அடைத்துவைக்கவோ மனதற்றவனாக அகிலம் அதில் ஆனந்தம் கொள்ளட்டுமே என்ற எண்ணத்துடன் தினம் ஒரு நிகழ்வையோ, சத்தியத்தையோ இவ்விணையதள பக்கத்தின் வாயிலாக உங்கள் உள்ளத்தில் பதிக்க விரும்புகிறேன். அனுதினம் நான் அண்டும் இறைவனுக்குத் தொண்டாக இப்பணியினைத் தினம் தினம் தொடருகிறேன்.

இவ்விணையதளத்தில் நுழைவுறும் தங்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

 

இரையையே தேடும் மானுடரூடே , இறையைத் தேடி இறைக்காய் இவ்வுயிரை, இத்தரையில் ஈவதே இன்பம்- Kirubagaran

Encounter Today : 20 November 2016

 

இப்படியும் காப்பார் கர்த்தர்

என்னைத் தேடிய யெகோவா